Terms of Use – எமது விதிமுறைகள்!

✧ ❖ ✧

Terms of Use – எமது விதிமுறைகள்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எங்களது Free Tamil Muslim matrimonial இணையதளமான noortamilnikkah.com ல் பதிவு செய்யும் உறுப்பினர்களுக்கு, நமது இந்திய அரசு நிர்ணயித்துள்ள அடிப்படைத் திருமண வயது கட்டாயமாகப் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

இந்த Free Tamil Muslim Matrimony இணையதளமான noortamilnikkah.com ஆனது, தமிழ்நாட்டில் வசிக்கின்ற, தமிழ் மற்றும் உருது பேசும் முஸ்லிம்களுக்காக மட்டுமே இயங்கி வருகின்றது. இதில் பதிவு செய்யப்பட்டு உள்ள தொடர்பு விபரங்களை, யாரேனும் வழிகேடான காரியங்களுக்குப் பயன்படுத்த முயற்சி செய்தால், மாவட்டக் காவல் துறை சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த Free Tamil Muslim Matrimony இணையதளமான noortamilnikkah.com ல் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள், தவறானத் தகவல்களை அளித்திருப்பது தெரியவரும் பட்சத்தில் அவர்களது ஐ.டி. எமது தளத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும்.

எமது வழிமுறைகள் :

  1. நம்பகத் தன்மை 100 சதவீதம் உறுதி செய்த பிறகே, பயோ-டேட்டா ஏற்றுக் கொள்ளப்படும். உரிய விபரங்கள் இல்லாத வரன்கள் நிராகரிக்கப்படும்.
  2. பெண் வீட்டார் தேர்ந்தெடுக்கும் மாப்பிள்ளை வீட்டார்க்கு மட்டும், அவர்களது அனுமதியுடன் பயோ-டேட்டா பகிரப்பட்டு, இருதரப்பு தொடர்பு மற்றும் சந்திப்பு ஏற்படுத்தி தரப்படும்.
  3. பெண்ணின் புகைப்படங்கள் எமது Free Tamil Muslim Matrimony இணையதளமான noortamilnikkah.com ல் பகிர கண்டிப்பாக அனுமதி கிடையாது. ஆணின் புகைப்படம் கட்டாயம் தேவை.
  4. இருதரப்பு பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்தால் மட்டுமே, பெண் வீட்டார் சம்மதத்தின் பேரில், பெண்ணின் புகைப்படம் பகிரவோ – பெண் பார்க்கும் நிகழ்ச்சிக்கோ ஏற்பாடு செய்யப்படும்.
  5. வரன் அமைத்து நிச்சயித்தப் பிறகே, முன் கூட்டிப் பேசி நிர்ணயம் செய்யப்பட்ட சேவைக் கட்டணம் Rs. 9999/- plus 18% GST பெறப்பட்டு ரசீது தரப்படும். (போக்குவரத்து செலவு தனி.)
  6. பதிவுக் கட்டணம் கிடையாது. வேறு எந்த மறைமுகக் கட்டணமும் கிடையாது.
  7. Sub Agents மற்றும் இடைத் தரகர்களுக்கு அனுமதி கிடையாது.
  8. வரன் வேறு வகையில் தங்களுக்கு அமைந்தாலும், அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டாலும், உரிய காரணங்களோடு எங்களுக்குத் தகவல் தெரிவித்து ரத்து செய்து கொள்ளலாம். அதற்கு எந்த ஒரு Cancellation கட்டணமும் வசூலிக்கப்படாமல், செலுத்தியக் கட்டணம் முழுமையாகத் திருப்பித் தரப்படும் என உறுதி கூறுகிறோம். நல்லதே நடக்க எல்லாம் வல்ல நாயனிடம் துஆச் செய்கிறோம்.

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு, அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால், அதனைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள். (அல் குர்ஆன் – 4:4)

அல்லாஹ் மணமக்கள் இருவரையும் இம்மையிலும் மறுமையிலும் ஒன்றிணைத்து வைப்பானாக! ஆமீன்.

மணமக்களை வாழ்த்தும் துஆ :

பார(க்)கல்லாஹூ ல(க்)க வபார(க்)க அலைக்க வஜமஅ பைன(க்)குமா ஃபீ ஃகைர்.

பொருள் : அல்லாஹ் உங்கள் இருவர்க்கும் வளம் (பரக்கத்) பெறச் செய்வானாக! நன்மையான விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக! அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரழி)

கொரியர் அனுப்ப வேண்டிய முகவரி :

நூர் தமிழ் நிக்காஹ்.காம்

M/s கலந்தர் ஏர்வே டிராவல்ஸ்,

புதிய பேருந்து நிலையம் அருகில்,

அருப்புக்கோட்டை – 626101

விருதுநகர் மாவட்டம்.

#TrichyMuslimFreeNikkah #TrichyUrduMuslimFreeNikkah #TrichyMuslimFreeMatrimony #TrichyUrduMuslimFreeMatrimony #TrichyMuslimBrides #TrichyUrduMuslimBrides #TrichyMuslimBridegrooms #TrichyUrduMuslimBridegrooms #CoimbatoreMuslimFreeNikkah #CoimbatoreMalayalamMuslimFreeNikkah #CoimbatoreMuslimFreeMatrimony #CoimbatoreMalayalamMuslimFreeMatrimony #CoimbatoreMuslimBrides #CoimbatoreMalayalamMuslimBrides #CoimbatoreMuslimBridegrooms #CoimbatoreMalayalamMuslimBridegrooms #SalemMuslimFreeNikkah #SalemUrduMuslimFreeNikkah #SalemMuslimFreeMatrimony #SalemUrduMuslimFreeMatrimony #SalemMuslimBrides #SalemUrduMuslimBrides #SalemMuslimBridegrooms #SalemUrduMuslimBridegrooms #TrichyMuslimFreeNikah #TrichyUrduMuslimFreeNikah #CoimbatoreMuslimFreeNikah #CoimbatoreMalayalamMuslimFreeNikah #SalemMuslimFreeNikah #SalemUrduMuslimFreeNikah