Activities – எமது செயல்பாடுகள்!
Activities – எமது செயல்பாடுகள்!
எமது செயல்பாடுகள்!
எங்களைத் தொடர்பு கொள்ளும் அனைத்து வாடிக்கையாளர்களும் எமது Free Tamil Muslim Matrimony இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாகவோ, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சொந்த கட்டடத்தில் இயங்கும் எங்களது Kalanthar Airway Travels அலுவலகத்திற்கு நேரில் வந்தோ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள Free Registration Form ஐ பிரிண்ட் எடுத்து நிரப்பி, எங்களது அலுவலக முகவரிக்கு கொரியர் செய்தோ இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு மற்றும் வரன் பார்வை
தங்கள் பதிவுகள் உரிய முறையில், பரிவுடன் பரிசீலனை செய்யப்பட்டு, தங்களுக்குப் பிரத்யேக ஐ.டி. உருவாக்கித் தரப்படும். அதன் பின்னர் எங்களது Free Tamil Muslim Matrimony இணையதளத்தில் உள் நுழைந்து, உங்களுக்குத் தேவையான வரன்களை இலவசமாகப் பார்வையிடலாம்.
நீங்கள் தேர்ந்து எடுக்கும் வரன்கள் குறித்து, இரு தரப்பு வீட்டார்க்கும் உரிய விபரங்கள் பகிரப்பட்டு இன்ஷா அல்லாஹ் வரன் நிச்சயித்து தரப்படும்.
இலவச Mediate சேவை
உங்களுக்குப் பிடித்த வரன் அமையும் வரையில், அது எவ்வளவு காலம் பிடித்தாலும், மனதிற்கு திருப்தி ஏற்படும் வரை இரு தரப்பு வீட்டார்க்கும் இலவச Mediate சேவையை செய்து தருகிறோம். எந்தவித முன் கட்டணமும் பெறுவதில்லை என்பதனை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சேவைக் கட்டணம்
வரன் நிச்சயித்துக் கொடுத்தப் பிறகே, நிர்ணயிக்கப்பட்ட சேவைக் கட்டணம்
பெற்றுக் கொண்டு ரசீது தரப்படும். (போக்குவரத்துச் செலவு தனி.)
எங்கள் சேவைப் பரப்பு
இந்திய அரசின் MSME துறையின் கீழ்ப் பதிவு செய்து, இந்த திருமண வரன் அமைக்கும் Free Tamil Muslim Matrimony சேவையை, தமிழ்நாட்டில் வசிக்கின்ற தமிழ் மற்றும் உருது பேசும் முஸ்லிம்களுக்கு செய்து தருகிறோம்.
அல்லாஹ்வின் பெருங்கிருபையாலும், எம் பெருமானார் (ஸல்) அவர்களின் துஆப் பரக்கத்தாலும் திருமணம் இனிதே நடைபெறும் வரை இன்ஷா அல்லாஹ் அனைத்து விதமானப் பணிகளையும், உங்கள் மனம் விரும்பும் வகையில் ஆற்றிடத் தயாராக இருக்கிறோம் என்பதனைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

